ரெயில் பயணிகளின் கோரிக்கையை மத்திய அரசு தாமதமாக நிறைவேற்றி உள்ளது -டி.ஆர்.பாலு பேட்டி

நீண்ட தாமதத்துக்கு பிறகு ரெயில் பயணிகளின் கோரிக்ைகயை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இதை பெரிய சாதனையாக ஒரு சிலர் காட்டிக்கொள்ள முயற்சிப்பது சரியல்ல என டி.ஆர்.பாலு எம்.பி. தெரிவித்தார்.

Update: 2023-02-26 20:44 GMT

தாம்பரம்,

2019-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உடனேயே சென்னை-மதுரை-சென்னை வழித்தடத்தில் செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரம் நிலையத்தில் நிற்க வேண்டும் என்ற கோரிக்கையை ெரயில் வாரியத் தலைவர் வினோத் யாதவிடம் நான் கடிதம் வாயிலாக கொடுத்தேன்.

அதன்பிறகு 04-12-2019 அன்று நாடாளுமன்ற மக்களவையில் இந்த கோரிக்கை தொடர்பாக எழுந்த விவாதத்தில் எனக்கும், அப்போதைய ெரயில்வே மந்திரி பியூஸ் கோயலுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அவையில் அமளி உருவானது.

கேள்வி நேரம் முடிந்த பிறகு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, என்னையும், பியூஸ் கோயலயும் தனது அறைக்கு அழைத்து சமாதானம் செய்ததுடன், எனது வேண்டுகோளை நிறைவேற்றிட உதவுமாறு மந்திரியிடம் குறிப்பிட்டார்.

4 ஆண்டுகள் ெதாடர் முயற்சி

இந்த கோரிக்கை தொடர்பாக அப்போதைய தெற்கு ெரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமசுக்கு 02-01-2020 அன்று நான் கடிதம் எழுதினேன். தமிழ்நாடு சம்பந்தப்பட்ட ெரயில்வே திட்டங்கள் குறித்து தமிழக எம்.பி.க்களின் கோரிக்கைகளை தொகுத்து, தெற்கு ெரயில்வே பொதுமேலாளருக்கு 11.10.2021 அன்று மீண்டும் கடிதம் எழுதப்பட்டது.

இந்த முயற்சிகளை தொடர்ந்து 21.02.2022 அன்று ெரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவை நாடாளுமன்ற வளாகத்தில் நான் நேரில் சந்தித்து நிலுவையில் உள்ள தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்தில் நின்று செல்லும் கோரிக்கை பற்றி வலியுறுத்தி கடிதம் ஒன்றையும் கொடுத்தேன்.

இவ்வாறு ஏறத்தாழ 4 ஆண்டுகளாக அயராமல் மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் விளைவாக, தேஜஸ் எக்ஸ்பிரஸ் ெரயில் சென்னை எழும்பூர்-மதுரை இடையே இருமார்க்கங்களிலும் தாம்பரத்தில் நின்று செல்லும் என்று மத்திய ெரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.

நீண்ட தாமதத்துக்கு பிறகு...

அதன்படி தென் தமிழகத்துக்குச் செல்லும் பல லட்சம் ெரயில் பயணிகள் இன்று (அதாவது நேற்று) முதல் தாம்பரம் ெரயில் முனையத்தில் இருந்து தேஜஸ் எக்ஸ்பிரஸ் ெரயில் சேவையின் மூலம் பயனடைவார்கள்.

நீண்ட தாமதத்துக்கு பிறகு மத்திய அரசு லட்சக்கணக்கான ெரயில் பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்றி உள்ளதை பெரிய சாதனையாக ஒரு சிலர் காட்டிக்கொள்ள முயற்சிப்பது சரியல்ல.

இல்லையென்றால், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் சேதுசமுத்திரத்திட்டம், மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி, சென்னை துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்ட விரைவுச் சாலை, 'நீட்' மருத்துவ நுழைவுத் தேர்வு பிரச்சினை, ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடைச் சட்டம் உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகளில் இவர்கள் தலையிட்டு செய்து காட்டியிருக்கலாமே. ஏன் செய்யவில்லை?, தமிழ்நாட்டு மக்கள் ஏமாறமாட்டார்கள்.

தமிழில் பேசி இருக்க வேண்டும்

தேஜஸ் எக்ஸ்பிரஸ் ெரயில் தொடக்க விழா தாம்பரத்தில் குறித்த நேரத்தில் நடைபெறவில்லை. ரெயில்வே துறை இதை முறையாக செய்யவில்லை. மேடையில் இருட்டாக இருந்தது. எங்கள் பெயரெல்லாம் தெரியாத அளவு இருக்கைகள் போட்டு மறைக்கப்பட்டு இருந்தது.

அதனால் நான் பேசவில்லை. ெரயில் புறப்பட்டு சென்ற பிறகு மத்திய மந்திரி பேசுவார் என அறிவிக்கிறார்கள். ெரயில்வே அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் முறைகேடுகளை செய்தனர். ெரயில்வே அதிகாரி ஆங்கிலத்தில் பேசுகிறார். மக்களுக்கு புரிகிற அளவில் அவர் தமிழில் பேசி இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்