தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும்

இலங்கை கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும் என இந்திய தேசிய மீனவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2023-02-20 18:45 GMT

இந்திய தேசிய மீனவர் சங்க தலைவர் ராஜேந்திர நாட்டார், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-புயல், மழை போன்றவற்றில் உயிரைப் பணயம் வைத்து தமிழக மீனவர்கள் தொழில் செய்து வருகின்றனர். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அவ்வப்போது அத்துமீறித் தாக்குவதும், கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி நாகை நம்பியார் நகர் மீனவர்களை இலங்கை கடல் கொள்ளையர்கள் நடுக்கடலில் வழிமறித்து, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களில் தாக்கினர். மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. தமிழக மீனவர்கள் தற்காப்புக்காக ஆயுதம் வைத்துக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும்.தமிழக மீனவர்கள் மீது நடத்தும் இந்த தொடர் தாக்குதலை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலில் தொழில் செய்யும் தமிழக மீனவர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்