இளம்பெண் மீது தாக்குதல்- வாலிபர் மீது வழக்கு

கழுகுமலையில் இளம்பெண் மீது தாக்குதல்- வாலிபர் மீது வழக்கு;

Update: 2022-06-02 15:16 GMT

கழுகுமலை:

கழுகுமலை விநாயகர் காலனியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் கலையரசன் (வயது 26). இவர், 24 வயது இளம்பெண்ணை கடந்த 7 வருடங்களுக்கு முன்பு காதலித்து வந்துள்ளார். தற்போது அந்த இளம்பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இநத்நிலையில் நேற்று முன்தினம் அந்த இளம்பெண் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது, கலையரசன் திடீரென்று அங்கு சென்றுள்ளார். அவரை அவதூறாக பேசி தாக்கி விட்டு கலையரசன் ஓடிவிட்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில் கலையரசன் மீது கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்