இங்கிலாந்துகாரர் மீதான வழக்கு;போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் விசாரணை

சட்டவிரோதமாக இலங்கை தப்பிச் செல்ல முயன்ற இங்கிலாந்துகாரர் மீதான வழக்கில் புதன்கிழமை போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடைபெற்றது.

Update: 2022-12-28 18:45 GMT

தூத்துக்குடி திரேஸ்புரம் முத்தரையர் காலனி கடற்கரை பகுதியில் சுற்றித்திரிந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜோனாதன் தோர்ன் (வயது 47) என்பவரை கியூ பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந் தேதி மடக்கி பிடித்தனர். அவர் மும்பையில் போதை பொருள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. 75 நாடுகளுக்கு பயணம் செய்துள்ள ஜோனதன் தோர்ன், தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்பி செல்ல முயன்று உள்ளார். இதுகுறித்து கியூ பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோனதன் தோர்னை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் ஜெயிலில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு குபேரசுந்தர் முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணை அதிகாரியான போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயஅனிதாவிடம் சாட்சி விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து வழக்கு விசாரணையை நாளைக்கு (வெள்ளிக்கிழமை) மாஜிஸ்திரேட்டு ஒத்தி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்