ராயக்கோட்டை
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள லிங்கனம்பட்டியில் இருந்து 15-க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் ஓசூர் சானசந்திரம் பகுதிக்கு நேற்று சரக்கு வாகனத்தில் சென்றனர். உத்தனப்பள்ளி அருகே உப்பரதம்மண்டரப்பள்ளி பகுதியில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலையோரம் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வாகனத்தில் வந்த 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அந்த வழியாக வந்தவர்கள் அவர்களை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.