நல்லம்பள்ளி அருகேகுட்கா கடத்தி வந்த கார் விபத்தில் சிக்கியதுதப்பியோடிய டிரைவருக்கு வலைவீச்சு

Update: 2023-08-28 19:45 GMT

நல்லம்பள்ளி

பெங்களூருவில் இருந்து குட்கா கடத்தி வந்த கார் நல்லம்பள்ளி அருகே விபத்தில் சிக்கியது. இதையடுத்து தப்பி ஓடிய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விபத்தில் சிக்கிய கார்

பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி நேற்று காலை கார் ஒன்று வந்தது. தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே புறவடை ஜங்ஷன் பிரிவு தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்தபோது காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில், கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அதியமான்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும், கார் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், விபத்துக்குள்ளான காரில் சோதனை செய்தனர்.

குட்கா பறிமுதல்

அப்போது காரில் மூட்டை, மூட்டையாக குட்கா இருப்பதும், கார் விபத்தில் சிக்கியதால் டிரைவர் தப்பி ஓடி விட்டதும் தெரியவந்தது. இந்த குட்காவை பெங்களூருவில் இருந்து கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான குட்கா மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய கார் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்