பனவடலிசத்திரம்:
நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள வன்னிக்கோனேந்தல் ஊரைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் கனகராஜ் (வயது 28). இவர் நேற்று தனது காரில் வன்னிக்கோனேந்தலில் இருந்து கூவாச்சிபட்டியை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கார் கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தேவர்குளம் போலீசார் விரைந்து வந்து கனகராஜ் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.