25 அடி ஆழ பள்ளத்தில் கார் கவிழ்ந்தது

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்ற போது அஞ்செட்டி அருகே 25 அடி ஆழ பள்ளத்தில் கார் கவிழ்ந்து பெங்களூருவை சேர்ந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-12-16 18:45 GMT

தேன்கனிக்கோட்டை

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்ற போது அஞ்செட்டி அருகே 25 அடி ஆழ பள்ளத்தில் கார் கவிழ்ந்து பெங்களூருவை சேர்ந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

பள்ளத்தில் கார் கவிழ்ந்தது

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஒரு காரில் 4 பேர் நேற்று தேன்கனிக்கோட்டை வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றனர். அஞ்செட்டி அருகே காட்டுப்பகுதியில் சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 25 அடி ஆழ பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் சென்ற 4 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து அந்த வழியாக சென்றவர்கள் அஞ்செட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று 4 பேரையும் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக 4 பேரும் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் காயம் அடைந்தவர்கள் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. தொடர்ந்து பள்ளத்தில் விழுந்த காரை கிரேன் மூலம் போலீசார் மீட்டனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அஞ்செட்டி காட்டுப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருவதால் சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்