கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே உள்ள கோபாலபுரத்தை சேர்ந்தவர் அந்தோணிராஜ். இவர் தனக்கு சொந்தமான காரை வ.உ.சி. நகரில் நிறுத்தி வைத்திருந்தார். இந்தநிலையில் அந்த பகுதியில் உள்ள காய்ந்த புற்களில் அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இந்த தீ பரவி அந்தோணிராஜீன் காரில் பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் காரின் பின்பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.