கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

திருச்சியில் மேம்பாலத்தில் கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-07-26 18:59 GMT

திருச்சியில் மேம்பாலத்தில் கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காரில் தீ

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டி.வி.எஸ்.டோல்கேட் மேம்பாலம் வழியாக அரியமங்கலம் பால்பண்ணை நோக்கி நேற்று பகல் ஒரு கார் வேகமாக சென்று கொண்டு இருந்தது. பாலத்தில் இருந்து பொன்மலை ஜி.கார்னர் அருகே அந்த கார் நெருங்கியபோது, திடீரென காரின் முன்பகுதியில் தீப்பிடித்து புகை வெளியேறியது.

சிறிதுநேரத்தில் கார் மள, மளவென எரிய தொடங்கியது. உடனே காரில் வந்தவர்கள் இறங்கி ஓட்டம் பிடித்தனர். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கண்டோன்மெண்ட் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

மேலும் அந்த வழியாக செல்ல வாகனங்களுக்குதடை விதித்து மாற்று வழியில் திருப்பி விட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் கார் முழுவதுமாக எரிந்து நாசமானது.

பரபரப்பு

இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த நபர்கள் யார்? என விசாரணை நடத்தினார்கள். ஆனால் காரில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்த நபர்கள் மீண்டும் அங்கு வரவில்லை. இதனால் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்