கால்வாய் உடைந்து சாலையில் பாயும் தண்ணீர்
வில்லுக்குறியில் கால்வாய் உடைந்து சாலையில் பாயும் தண்ணீர் . வாகன ஓட்டிகள் அவதி
அழகியமண்டபம்,
வில்லுக்குறியில் இருந்து ஆசாரிபள்ளத்திற்கு கால்வாய் கரையோரமாக ஒரு சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் வாகனங்களிலும், நடந்தும் பயணம் ெசய்கிறார்கள். தற்போது கால்வாயில் சிறிய அளவில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் ஆறாக பாய்ந்து செல்கிறது. இதனால், சாலை குண்டும் குழியுமாக மாறி வருகிறது. மேலும் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே, கால்வாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.