மர்ம விலங்கு கடித்து கன்றுகுட்டி செத்தது

இருக்கூர் அருகே மர்ம விலங்கு கடித்து கன்றுகுட்டி செத்தது; இதுகுறித்து வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Update: 2023-02-01 18:57 GMT

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் தாலுகா இருக்கூர் அருகே உள்ள செஞ்சுடையாம்பாளையம் போயன்தோட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் செந்தில்ராஜா. இவர் வீட்டில் எருமை மற்றும் பசுமாடுகள் வளர்த்து வருகிறார். இவரது மாட்டு தொழுவத்தில் கட்டியிருந்த கன்று குட்டியை காணவில்லை. இதுகுறித்து பரமத்தி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கன்று குட்டி மாட்டு தொழுவத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள ஒரு விவசாயி தோட்டத்தில் இறந்து கிடப்பதாக செந்தில்ராஜாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து செந்தில்ராஜா மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு சென்று பார்த்தபோது மர்ம விலங்கு கன்று குட்டியை கடித்து கொன்றது தெரியவந்தது. இதுகுறித்து இருக்கூர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் நாமக்கல் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த இருக்கூர் கிராம நிர்வாக அலுவலர் வேணுகோபால் மற்றும் நாமக்கல் வனவர்கள் சந்திரசேகர், பிரியங்கா ஆகியோர் மர்ம விலங்கின் கால் தடங்களை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்