அங்கன்வாடி மையத்தைசுற்றி புதர்களை அகற்ற வேண்டும்

அங்கன்வாடி மையத்தைசுற்றி புதர்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-02-19 17:36 GMT

அரக்கோணம் சுவால்பேட்டை மேலாண்ட ஒப்பணக்கார தெருவின் இறுதியில் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே அசோக் நகர் செல்லும் வழியில் அங்கன்வாடி மையம் புதர்களால் சூழப்பட்டுள்ளது. அந்த பகுதியில் கொடிய விஷமுள்ள பூச்சிகள் உள்ளதால் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் அந்த இடத்தில் உள்ள புதர்களை அகற்றி சுத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்