அய்யப்ப பக்தர்கள் சென்ற பஸ் பள்ளத்தில் இறங்கியது

அய்யப்ப பக்தர்கள் சென்ற பஸ் பள்ளத்தில் இறங்கியது

Update: 2023-01-02 19:41 GMT

புதுச்சேரியில் இருந்து சபரிமலைக்கு 55 பக்தர்களை ஏற்றிக்கொண்டு ஒரு பஸ் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள அதிகாரம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இந்த விபத்தில் பக்தர்கள் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்