புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மார்ச் 9-ம் தேதி தொடங்குகிறது
புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மார்ச் 9-ம் தேதி தொடங்குகிறது.
புதுச்சேரி,
புதுவை சட்டசபையில் கடந்த காலங்களில் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால், கடந்த 12 ஆண்டுகளாக மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மார்ச் 9-ம் தேதி காலை 9. 45 மணிக்கு தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்ற உள்ளார் என்று சட்டப்பேரவைச்செயலர் தயாளன் ஆளுநர் ஒப்புதலுடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து பட்ஜெட் தாக்கலாகும் தேதி வெளியாகும். வரும் வாரங்களில் முழு பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் கிடைத்துவிடும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.