கள்ளக்காதல் விவகாரத்தில் தாக்கப்பட்ட அண்ணன் சாவு

Update: 2023-07-24 19:58 GMT

ஏற்காடு:-

ஏற்காடு அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் தாக்கப்பட்ட அண்ணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தம்பி மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்காதல்

ஏற்காடு அருகே கொம்மகாடு கிராமத்தை சேர்ந்தவர் வினோத் (வயது 26). இவருடைய தம்பி விவேக் (25) மனைவி வெண்ணிலா. வினோத்தும், வெண்ணிலாவும் திருமணத்துக்கு முன்பே காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையே சூழ்நிலை காரணமாக வினோத் தம்பி விவேக், வெண்ணிலாவை திருமணம் செய்துள்ளார். திருமணத்துக்கு பிறகும் தம்பி மனைவி என்று கூட பார்க்காமல் வினோத் வெண்ணிலாவுடன் நெருங்கி பழகி உள்ளார். அவர்களுக்குள் கள்ளக்காதல் உருவானது.

இந்த விவகாரம் அறிந்த விவேக், வினோத்தை கண்டித்துள்ளார். சம்பவத்தன்று இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் வினோத்தை, விவேக் தாக்கி சாலையோர பள்ளத்தில் தள்ளி விட்டுள்ளார். அப்போது, காட்டெருமை தாக்கி வினோத் காயம் அடைந்ததாக உறவினர்களிடம் கூறியுள்ளார். ஆஸ்பத்திரியில் விேனாத் சுயநினைவு இல்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆஸ்பத்திரியில் சாவு

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய ஏற்காடு போலீசார் கள்ளக்காதல் விவகாரத்தில் வினோத்தை தாக்கியதாக கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த போலீசார் விவேக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே வினோத் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

அதன்பிறகு ஏற்காடு போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றினர். வினோத்தை கொலை செய்ததாக விவேக் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மனைவியுடனான கள்ளக்காதலை கைவிடாத அண்ணனை தம்பி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்