போலீஸ் தேடிய அண்ணன்-தம்பி, விருதுநகர் கோர்ட்டில் சரண்

போலீஸ் தேடிய அண்ணன்-தம்பி, விருதுநகர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.;

Update: 2022-08-25 18:42 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 40 வயது பெண் ஒருவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் போலீசார் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர்.

இதில் மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் உள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்த போராளி என்ற பிரபாகரன் (வயது 26), அவரது தம்பி விஜய் என்ற விஜயன் (22) ஆக இருவரும் தலைமறைவாக இருந்த நிலையில் அவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அவர்கள் இருவரும் விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்கள் இருவரையும் வருகிற 29-ந் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு நிஷாந்தினி உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் விருதுநகர் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்