தரைப்பாலத்தை உயர்த்தி கட்டி சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை

தரைப்பாலத்தை உயர்த்தி கட்டி சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை

Update: 2023-01-19 11:46 GMT

குண்டடம்

குண்டடம் அருகே உள்ள தரைப்பாலத்தை உயர்த்தி கட்டி சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தரைப்பாலம்

திருப்பூர் மாவட்டம் குண்டடத்தை அடுத்த செம்மே கவுண்டன்பாளையம் அருகே ஈஸ்வர செட்டிபாளையம் வழியாக உடுமலை-பல்லடம் சாலையை இணைக்கும் தார்ச்சாலை உள்ளது. இதனால் எப்போதும் இந்த சாலை வழியாக இருசக்கர வாகனம் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்தநிலையில் செம்மே கவுண்டன்பாளையம் அருகே உள்ள தரைப்பாலம் மிகவும் தாழ்வாக உள்ளது. மேலும் தரைப்பாலத்தில் பல இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டு குண்டும் குழியுமாக பழுதடைந்து காட்சி அளிக்கிறது. இதனால் மழைகாலங்களில் இந்த பாலத்தின் மீது சுமார் 3 அடிக்கும் மேல் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்வதால் அந்த நேரங்களில் வாகன ஓட்டிகள் மற்றும் இப்பகுதில் வசிக்கும் பொதுமக்கள் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

உயர்த்தி கட்ட கோரிக்ைக

மேலும் பாலத்தில் தண்ணீர் அரிப்பு ஏற்பட்டு முற்றிலுமாக சேதமடையும் நிலையில் உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தாழ்வாகவும் சேதமடைந்த நிலையில் உள்ள இந்த தரைபாலத்தை வாகன போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் உயர்த்தி கட்ட வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-------

குண்டடத்தை அடுத்த செம்மேகவுண்டன்பாளையம் அருகே தாழ்வாகவும் சேதமடைந்த நிலையில் உள்ள தரைப்பாலத்தை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்