திருமணம் நிச்சயமான புதுமாப்பிள்ளை திடீர் சாவு

திருமணம் நிச்சயமான புதுமாப்பிள்ளை திடீரென இறந்தார்.

Update: 2023-08-25 20:32 GMT

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் கார்த்திகா நகர் பகுதியில் வசித்து வருபவர் ரங்கராஜன். ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை அதிகாரி. இவரது மகன் உதய் (வயது28). இவர் விளையாட்டு போட்டிகளின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவில் அவரது வீட்டின் மாடியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் மாடியில் இருந்து வீட்டுக்குள் உதய் வரவில்லை அதனால் அவரது பெற்றோர் உதயாவை தேடி மாடிக்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கும் அவர் இல்லை. ஆனால் செல்போன் மட்டும் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து பதறி போன பெற்றோர் மற்றும் அவரது நண்பர்கள் உதயை பல இடங்களில் தேடி பார்த்தனர்ஆனாலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அதே பகுதியில் ஒரு வீட்டின் காம்பவுண்டு சுவரின் அருகே காயத்துடன் உதய் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த திருநகர் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.உதய் மாடியில் இருந்த போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலைசெய்து கொண்டாரா? என்பது உடனடியாக தெரியவில்லை.இது குறித்து திருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். உதய்க்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அடுத்த மாதம் திருமணம்நடக்க இருந்த நிலையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்