கால்வாயில் தவறி விழுந்து கொத்தனார் பலி

திருவட்டார் அருகே கால்வாயில் தவறி விழுந்து கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-12-26 20:26 GMT

திருவட்டார்

திருவட்டார் அருகே கால்வாயில் தவறி விழுந்து கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.

கொத்தனார்

திருவட்டார் அருகே உள்ள முளவிளை கீழ்புதுச்சேரி விளையை சேர்ந்தவர் பிரான்சீஸ் (வயது58). இவர் கேரளாவில் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவரது முதல் மனைவி ஞானசவுந்தரி 25 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உண்டு. முதல் மனைவி இறந்ததையடுத்து அவரது தங்கையான வனஜாவை 2-வது திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்தநிலையில் பிரான்சிஸ் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதற்காக கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். சம்பவத்தன்று வீட்டின் பின்புறம் உள்ள பட்டணம் கால்வாய் கரையில் உள்ள தோட்டத்தில் வேலை செய்ய சென்றார். பின்னர் இரவு வெகுநேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை.

பிணமாக மீட்பு

இதனால் உறவினர்கள் அவரை பல இடங்களிலும் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. மறுநாள் காலையில் கால்வாயில் பிரான்சீஸ் பிணமாக கிடந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்து உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர் கால்வாயில் தவறி விழுந்து இறந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து திருவட்டார் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கபெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர், பிரான்சீஸ் கால்வாயில் விழுந்து இறந்தது எப்படி? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்