கிராமசபை கூட்டம் புறக்கணிப்பு கைவிடப்பட்டது

பேச்சுவார்த்தையில் உடன்பாடு: கிராமசபை கூட்டம் புறக்கணிப்பு கைவிடப்பட்டது

Update: 2023-04-30 18:45 GMT

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் அகரகொந்தகை ஊராட்சி வாழ்மங்கலம் வள்ளுவர் தெரு பகுதி பொதுமக்கள், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி இன்று(திங்கட்கிழமை) நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்து போஸ்டர் வெளியானது. அதை அடுத்து நாகை தாசில்தார் ராஜசேகரன், திருமருகல் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜவகர், திருமருகல் வருவாய் ஆய்வாளர் சுந்தர்வளவன் ஆகியோர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையில் குடிநீர் வசதி, மயானம் வசதி, நீர்த்தேக்க தொட்டி சீரமைப்பு, தாழ்வான மின் கம்பிகள் சீரமைப்பு, வழி நடுவில் உள்ள மின்கம்பம் சீரமைப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றி தருவதாக உறுதியளித்ததை அடுத்து கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பை கைவிடுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இதில் திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ், ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி பக்கிரிசாமி, ஊராட்சி செயலர் ரமேஷ் ஆகியோர் உடன் இருத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்