மாணவியை கடத்தி சென்ற வாலிபர், போக்சோவில் கைது

முகநூல் மூலம் பழகி மாணவியை கடத்தி சென்ற வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-22 18:45 GMT

நன்னிலம்:

முகநூல் மூலம் பழகி மாணவியை கடத்தி சென்ற வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

பிளஸ்-2 மாணவி

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் 16 வயது மாணவிக்கும், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ஆடூர் அகரம் பகுதியை சேர்ந்த முருகன்(வயது 24) என்ற வாலிபருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் இவர்களுக்கிடையே காதலாக மலர்ந்தது. இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் பள்ளிக்கு சென்ற மாணவி மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. தனது மகளை காணாத மாணவியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். எங்கு தேடியும் மாணவி கிடைக்கவில்லை.

கடத்தல்

இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் பேரளம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த மாணவி சிதம்பரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் முருகனுடன் இருப்பது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து முருகனை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி முருகன், மாணவியை கடத்தி சென்றது தெரிய வந்தது.

போக்சோவில் கைது

இதுகுறித்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்