சிறுமியை கடத்திய வாலிபருக்கு வலைவீச்சு

மயிலாடுதுறையில் சிறுமியை கடத்திய வாலிபரை போலிசார் வலைவீசி தேடி வருகின்றனார்

Update: 2022-11-08 18:45 GMT

மயிலாடுதுறை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி. இவருக்கும், திருவண்ணாமலை மாவட்டம் கீழநாச்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பிரேம்குமார்(வயது20) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளாடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி அதிகாலையில் சிறுமி வீட்டில் இருந்து மாயமாகி விட்டார். இதுகுறித்து சிறுமியின் தாயார் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சிறுமியை பிரேம்குமார் கடத்தி சென்றது தெரிய வந்தது. இதை தொடர்ந்து பிரேம்குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்