வீடு புகுந்து திருடிய சிறுவன் கைது

போடியில் வீடு புகுந்து திருடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-05 19:30 GMT

போடி சந்தைப்பேட்டை கிழக்கு தெருவை சேர்ந்தவர் மணி மகன் ரஞ்சித்குமார் (வயது 45). இவர் மனைவியுடன் வெளியே சென்றார். அவருடைய தாய் அருகே உள்ள மகள் வீட்டுக்கு சென்றிருந்தார். சிறிது நேரத்தில் ரஞ்சித்குமார் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் உள்ளே யாரோ இருப்பதுபோல் சத்தம் கேட்டது. உடனே உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை ஒரு சிறுவன் திருடுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவனை ரஞ்சித்குமார் கையும்களவுமாக பிடித்து போடி நகர் போலீசில் ஒப்படைத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கம்பம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனை கைது செய்தனர். அவன் திருடிய 5¼ பவுன் நகைகள், வெள்ளி கொலுசு, வெள்ளி கைச்சங்கிலி மற்றும் ரூ.1,200 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவனை மதுரையில் உள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். கைதான சிறுவன் மீது ஏற்கனவே கம்பம், உத்தமபாளையம் மற்றும் திருப்பூர், ஊத்துக்குழி உள்ளிட்ட இடங்களில் திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்