காய்கறிகள் வாங்கிய வாலிபருக்கு குலுக்கல் பரிசு

கூடலூர் உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்கிய வாலிபருக்கு குலுக்கல் பரிசை ஆர்.டி.ஓ.சரவண கண்ணன் வழங்கினார்.

Update: 2022-07-24 13:55 GMT

கூடலூர், 

​கூடலூர் உழவர் சந்தையில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி புதுப்பொலிவுடன் உழவர் சந்தை திறக்கப்பட்டு உள்ளது. தற்போது உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் விளைபொருட்களான மிளகு, ஏலக்காய், தேன், பால் சார்ந்த பொருட்கள், மதிப்புக்கூட்டப்பட்ட தயாரிப்புகள், பழங்குடியினரின் பாரம்பரிய தயாரிப்புகள் அனைத்தும் தரமான முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

முன்னதாக கூடலூர் உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்குபவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி குலுக்கல் நடைபெற்றது. இதில் அதிர்ஷ்டசாலியாக திலக்ராஜ் என்ற வாலிபர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு கூடலூர் ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் பரிசு வழங்கினார். தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் உழவர் சந்தையில் பொருட்களை வாங்கி ஆதரிக்க வேண்டும் என வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் துணை இயக்குனர் ஜாய்லின் சோபியா கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்