பட்டாசு வெடித்து சிறுவன் படுகாயம்
ஆலடி அருகே பட்டாசு வெடித்து சிறுவன் படுகாயம் அடைந்தான்.;
ஆலடி,
ஆலடி அருகே உள்ள பாலக்கொல்லை வடக்கு காலனி மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு வாண வேடிக்கையுடன் சாமி வீதிஉலா நடைபெற்றது. இந்த நிலையில் அதேபகுதியை சேர்ந்த அரசன் மகன் புவனேஸ்ரவன் (வயது 11) நேற்று கோவில் அருகே கீழே கிடந்த வெடிக்காத பட்டாசுகளை வைத்து விளையாடி கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு வெடித்தது. இதில், சிறுவனின் இடதுகையில் இருந்த 4 விரல்களில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் அலறி துடித்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள் இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில், ஆலடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.