சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை

தாய், தந்தை பிரிந்து சென்ற விரக்தியில் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

Update: 2023-03-31 18:45 GMT

ராமநாதபுரம் இந்திராநகரை சேர்ந்தவர் மார்க்கண்டன். இவரது மனைவி சரண்யா. கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக மார்க்கண்டன் பிரிந்து மதுரை சென்று கூலி வேலை செய்து வந்துள்ளார். சரண்யா ராமநாதபுரத்தில் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மலேசியாவிற்கு வேலைக்கு சென்றுவிட்டாராம். இதனால் அவரது 2 மகன்கள் சாமிராஜன் (வயது 11), மதன் (9) ஆகியோரை தனது தாய் பஞ்சவர்ணத்திடம் பார்த்து கொள்ளமாறு கூறி விட்டு சென்று விட்டாராம். சாமிராஜன் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தாய்-தந்தை பிரிந்து சென்றுவிட்டதால் மனவருத்தத்தில் இருந்த சாமிராஜன் வீட்டின் பின்புறம் இருந்த கொய்யா மரத்தில் சேலையால் தூக்குப் போட்டு தொங்கி கொண்டிருந்தார். அதனை கண்ட அக்கம்பக்கத்தினர் பார்த்து சிறுவனை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாமிராஜன் இறந்தார். இதுகுறித்து சிறுவனின் தந்தை மார்க்கண்டன் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்