விருதுநகரில் வரும் ஆண்டுகளிலும் புத்தகத்திருவிழா நடத்தப்படும்

விருதுநகரில் வரும் ஆண்டுகளிலும் புத்தகத்திருவிழா நடத்தப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

Update: 2022-11-27 19:33 GMT


விருதுநகரில் கடந்த 17-ந் தேதி தொடங்கிய புத்தகத்திருவிழாவின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- விருதுநகரில் மாரியம்மன் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இந்த பள்ளி வளாகத்தில் பொருட்காட்சி நடைபெறுவது உண்டு.

அதேபோன்று இங்கு இந்த புத்தகத்திருவிழாவை ஏற்பாடு செய்த கலெக்டரை மனதார பாராட்டுகிறேன். முதல்-அமைச்சர் உத்தரவிட்டதன் பேரில் அதனை சிரமேற் கொண்டு இதைச்செய்து முடித்துள்ளார். இனி வரும் ஆண்டுகளிலும் இதுபோன்ற புத்தகத்திருவிழா நடைபெறும். இதற்கு ஏற்பாடு செய்த கலெக்டரையும் அவருடன் பணியாற்றிய அதிகாரிகளையும் மனமார பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., எழுத்தாளர் மனுஷயபுத்திரன், சீனிவாசன் எம்.எல்.ஏ., நகரசபை தலைவர் மாதவன், யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்