முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய "திராவிட மாடல்" எனும் நூல் வரும் 15-ம் தேதி வெளியீடு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய "திராவிட மாடல்" எனும் நூல் வரும் 15-ம் தேதி வெளியிடப்படுகிறது.
சென்னை,
தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் விருதுநகர் அருகே உள்ள பட்டம்புதூர் கலைஞர் கடலில் வருகிற 15-ந் தேதி நடைபெற உள்ளது. முப்பெரும் விழாவுக்கான ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய "திராவிட மாடல்" கொள்கை கோட்பாடுகள் எனும் நூல் வரும் 15-ம் தேதி (வியாழக்கிழமை) வெளியிடப்படுகிறது. விருதுநகரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட டி.ஆர்.பாலு எம்.பி., பெற்றுக்கொள்கிறார்.
திராவிட மாடல் கோட்பாடு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரைகளின் மையக் கருத்தை தொகுத்து புத்தகமாக திமுக வெளியிடுகிறது.