வடசேரியில் சாலையோரம் தொழிலாளி பிணம்

வடசேரியில் சாலையோரம் தொழிலாளி பிணம் கிடந்தது.

Update: 2023-03-09 20:40 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவில் வடசேரி சந்திப்பு அருகே சாலையோரம் சம்பவத்தன்று ஒரு ஆண் பிணம் கிடந்தது. இதைப் பார்த்த அந்த பகுதி மக்கள் வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுபற்றி விசாரணை நடத்தியபோது பிணமாக கிடந்தவர் கலுங்கடியை சேர்ந்த தொழிலாளி கண்ணன் (வயது 52) என்பது தெரியவந்தது. இவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. அதிக மதுபோதையில் இறந்தாரா? அல்லது உடல் நலக்குறைவு காரணமாக இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்