பூட்டிய வீட்டில் இளம்பெண் பிணம்

சிவகாசி அருகே பூட்டிய வீட்டில் இளம்பெண் பிணமாக கிடந்தார்.

Update: 2022-05-31 19:49 GMT

சிவகாசி,

சிவகாசி அருகே உள்ள பூலாவூரணியில் முனீஸ்வரன் என்பவர் வசித்து வந்தார். கட்டிட தொழிலாளி. இவருக்கும் அவரது மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்ட நிலையில் அவர் முனீஸ்வரனை பிரிந்து சென்று விட்டார். இந்தநிலையில் கூலி வேலை செய்து வந்த அதே பகுதியை சேர்ந்த காளிராஜ் என்பவர் முனீஸ்வரனுடன் நட்புடன் பழகி வந்தார். காளிராஜ் வீட்டிற்கு முனீஸ்வரன் அடிக்கடி சென்று வந்ததாக கூறப்படுகிறது. அப்போது முனீஸ்வரனுக்கும், காளிராஜ் மனைவி ராஜலட்சுமி (வயது 24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த விவகாரம் காளிராஜூக்கு தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார்.

அதன் பின்னர் ராஜலட்சுமி அருப்புக்கோட்டையில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் முனீஸ்வரன், ராஜலட்சுமியை தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ராஜலட்சுமி அருப்புக்கோட்டையில் இருந்து சிவகாசி பள்ளப்பட்டிக்கு வந்துவிட்டார்.அங்கு தனி வீட்டில் முனீஸ்வரனுடன் குடும்பம் நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் ராஜலட்சுமிக்கும், முனீஸ்வரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் பூட்டி இருந்த ராஜலட்சுமியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிவகாசி கிழக்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மலையரசி சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது வீட்டில் இளம் பெண் ராஜலட்சுமியின் பிணம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. பின்னர் பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ராஜலட்சுமியுடன் வசித்து வந்த முனீஸ்வரனை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags:    

மேலும் செய்திகள்