கிணற்றில் முன்னாள் ராணுவ வீரர் பிணம்

ராஜபாளையம் அருகே கிணற்றில் இருந்து முன்னாள் ராணுவ வீரரின் உடல் மீட்டெடுக்கப்பட்டது.

Update: 2022-06-07 20:30 GMT

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே தேவதானம் சாஸ்தா கோவில் செல்லும் சாலையில் பெரிய கண்மாய் அருகில் உள்ள விவசாய கிணற்றில், ஆண் பிணம் மிதப்பதாக ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் வந்தது. அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று இறந்து கிடந்தவரின் உடலை மீட்டனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர் தேவதானத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஆதிமூலம் (வயது39) என்பதும் தெரிய வந்தது. இவர் குளிக்க செல்லும் போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது எப்படி இறந்தார்? என்பது குறித்து சேத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்