ரெயில்வே தண்டவாளத்தில் கல்லூரி மாணவி பிணம்
விருத்தாசலம் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் கல்லூரி மாணவி பிணம் கிடந்தார்.
விருத்தாசலம்,
அரியலூர் மாவட்டம் ஈச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் காமராஜ் மகள் இந்திரா (வயது 19). இவர் விருத்தாசலம் அடுத்த திட்டக்குடி அரசு கலைக் கல்லூரியில் பி.காம். இறுதி ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை ஈச்சங்காடு ரெயில்வே தண்டவாளத்தில் ரத்தகாயங்களுடன் இந்திரா பிணமாக கிடந்தார்.
இது குறித்த தகவலின் பேரில் விருத்தாசலம் ரெயில்வே இருப்புப்பாதை சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் மற்றும் போலீசார் விரைந்து சென்று இந்திராவின் உடலை மீட்டு பிரேத பாிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசாா் வழக்குப்பதிவு செய்து இந்திரா, ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.