பார்வையற்றவர்கள் திடீர் சாலை மறியல்

பார்வையற்றவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-12 19:48 GMT

திருச்சி பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே மேஜர் சரவணன் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சங்க தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். பொருளாளர் வரதராஜன், செயலாளர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். வருவாய்த்துறை மூலம் பார்வையற்றோருக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் பெட்டிக்கடை வைத்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும். நலிவுற்ற இசை கலைஞர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை பார்வையற்ற இசைக்கலைஞர்களுக்கும் வழங்க வேண்டும். அரசு பஸ்களில் மாற்றுத்திறனாளிகள் கொண்டு செல்லும் பொருட்களுக்கு சுமை கட்டணத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்பட 8 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து பார்வையற்றவர்களிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்