தமிழக அரசை கண்டித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசை கண்டித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-27 19:58 GMT

தமிழ்நாட்டின் தாய்மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிக்கும் தி.மு.க. தலைமையிலான தமிழக அரசை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட பா.ஜனதாவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியனர் தி.மு.க. தலைமையிலான தமிழக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் கட்சியின் கல்வியாளர் பிரிவின் மாநில தலைவர் தங்க.கணேசன் நிருபர்களிடம் கூறுகையில், தமிழ் மொழியை வளர்க்கிறேன் என்று கூறி தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு தமிழை அழித்து கொண்டு வருகிறது. தமிழை பிரதமர் மோடி யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வசனத்தோடு உலகம் முழுவதும் தமிழ் மொழியின் சிறப்பு தன்மையை, அதன் பெருமையை உலகம் முழுவதும் பரப்பி வருகிறார். தற்போது தி.மு.க. அரசானது தேவையில்லாத மாநில கல்வி கொள்கை என்ற கொள்கையை உருவாக்குகிறார்கள். அருமையான தேசிய கல்வி கொள்கையை பிரதமர் கொண்டு வந்துள்ளார். அதில் மூன்று மொழிகள் என்பது நீங்கள் விரும்புகின்ற மொழியை படியுங்கள் என்று தான் கூறுகிறாரே தவிர அந்த கல்விக் கொள்கையில், இந்தியை நீங்கள் படியுங்கள் என்று கூறவில்லை. இந்தியை வைத்து அரசியல் செய்யலாம் என்று நினைக்கின்ற தி.மு.க.வின் பூச்சாண்டி வேலைகள் இனி செயல்படாது. தேசிய கல்வி கொள்கை வந்தால் தமிழக மக்கள் மேன்மை அடைவார்கள், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்