கடலூர் பஸ் நிலையம் எதிரே தடுப்பு கட்டையை அகற்ற வேண்டும் மாநகர ஆட்டோ சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

கடலூர் பஸ் நிலையம் எதிரே தடுப்பு கட்டையை அகற்ற வேண்டும் என மாநகர ஆட்டோ சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-12-17 19:49 GMT

கடலூர் அனைத்து மாநகர ஆட்டோ சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடலூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அமானுல்லா தலைமை தாங்கினார். ஆசைத்தம்பி, ஜெயசுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கடலூர் பஸ் நிலையத்திற்குள் ஆட்டோக்களை அனுமதிக்க வேண்டும். சுரங்கப்பாதை மேல் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களை நிரந்தரமாக அகற்ற வேண்டும். பழைய முத்தையா திரையரங்கம் சாலையை திறக்க வேண்டும். பஸ் நிலையம் எதிரே உள்ள சுப்ராயலுநகருக்கு செல்லும் வழியில் இருக்கும் தடுப்புகட்டையை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கார்த்திகேயன் நன்றி கூறினார். அதனை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்கள் ஊர்வலமாக சென்று துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்து விட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்