மதுக்கடையை இடமாற்ற வேண்டும்

ஆயக்காரன்புலம் கடைத்தெருவில் இயங்கி வரும் மதுக்கடையை இடமாற்ற வேண்டும் என கலெக்டருக்கு கோரிக்கை விடுத்தனர்.

Update: 2022-12-07 18:45 GMT

வாய்மேடு:

நாகை மாவட்டம் ஆயக்காரன்புலம் கடைத்தெருவில் உள்ள அரசு மதுபான கடையை இடமாற்ற வேண்டும் என சமூக ஆர்வலரும், பா.ஜனதா கட்சி ஒன்றிய தலைவருமான கரு.நாகராஜன் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- ஆயக்காரன்புலம் கடைத்தெருவில் விதிகளுக்கு புறம்பாக நெடுஞ்சாலையில் இருந்து 200 மீட்டர் தொலைவில் மதுக்கடை உள்ளது. இந்த கடை அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தினமும் பஸ்சுக்கு காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் அங்கு உள்ள மது வாங்கும் மதுப்பிரியர்கள் பஸ் நிறுத்தத்தில் மது குடித்து விட்டு, பாட்டிலை அங்கேயே உடைத்து வீசுகிறார்கள். மேலும் தகாத செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். எனவே இந்த மதுக்கடையை உடனடியாக இடமாற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்