4 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் ஆழியாறு அணை காட்சி மாடம்

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதை 9-வது கொண்டை ஊசி வளைவில் உள்ள ஆழியாறு அணை காட்சி மாடம் 4 ஆண்டுகளாக பூட்டி கிடக்கிறது. அதை நீக்க வனத்துறை நடவடிக் கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2023-08-19 19:15 GMT

வால்பாறை


வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதை 9-வது கொண்டை ஊசி வளைவில் உள்ள ஆழியாறு அணை காட்சி மாடம் 4 ஆண்டுகளாக பூட்டி கிடக்கிறது. அதை நீக்க வனத்துறை நடவடிக் கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.


மலைப்பாதை


வால்பாறை பகுதிக்கு தமிழகம், கேரளா, கர்நாடக மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக் கையில் வந்து செல்கின்றனர்.

அதில் பொள்ளாச்சியை அடுத்த ஆழியாரில் இருந்து வால்பாறைக்கு செல்லும் மலைப்பாதை 40 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. அதில் மொத்தம் 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.

அந்த மலைப்பாதையில் பயணம் செய்வது சுற்றுலா பயணிகளுக்கு புதிய அனுபவத்தை தருகிறது.

அதிலும் குறிப்பாக கொண்டை ஊசி வளைவுகளில் திரும்பி திரும்பி செல்லும் போது தெரியும் இயற்கை காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கிறார்கள்.

காட்சி மாடம்

வால்பாறை மலைப்பாதையில் 9-வது கொண்டை ஊசி வளைவில் ஆழியாறு அணையை பார்த்து ரசிக்கும் வகையில் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் சார்பில் காட்சி மாடம் அமைக்கப்பட்டு உள்ளது.


அங்கிருந்து பார்த்தால் ஆழியாறு அணையின் அழகிய தோற்றம், மலைப்பாதை, சமவெளியில் உள்ள விவசாய நிலங்கள், பனி மூட்டம் உள்ளிட்ட இயற்கையை தரிசிக்க முடியும். அங்கிருந்து இயற்கை அழகை சுற்றுலா பயணிகள் கண்டு களித்து வந்தனர்.


அனுமதி இல்லை


இந்த நிலையில் ஆழியாறு காட்சி மாடத்தில் முள்வேலி போட்டு கடந்த 4 ஆண்டுகளாக வனத்துறையினர் பூட்டி அடைத்து வைத்து உள்ளனர். மேலும் அங்கு யாரும் சென்று விடாதபடி தடுக்க வேட்டைத்தடுப்பு காவலர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ள னர்.

அவர்கள் யாரையும் காட்சி மாடத்துக்கு அனுமதிப்பது இல்லை.

இது பற்றி வேட்டைத்தடுப்பு காவலர்களிடம் கேட்டால், காட்சி மாடம் பகுதியில் வரையாடுகள் அதிகம் நடமாடுகிறது.

அவற்றுக்கு சுற்றுலா பயணிகளால் பாதிப்பு ஏற்படக் கூடும். எனவே அங்கு சுற்றுலா பயணிகள் இறங்கி நடமாடுவதற்கு அனுமதி மறுப்பதாக கூறுகிறார்கள்.


திறக்க வேண்டும்


இதனால் இயற்கையை ரசிப்பதை வனத்துறை தடுப்பதாக சுற்றுலா பயணிகள் கூறுகிறார்கள். எனவே வால்பாறை மலைப்பாதை 9-வது கொண்டை ஊசி வளைவில் உள்ள ஆழியாறு காட்சி முனை மாடத்தை திறக்க வனத்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.


மேலும் செய்திகள்