ஆட்டோவை மீட்டு தரக்கோரி இடிதாங்கி கோபுரத்தில் ஏறி டிரைவர் தற்கொலை மிரட்டல்

ஆட்டோவை மீட்டு தரக்கோரி இடிதாங்கி கோபுரத்தில் ஏறி டிரைவர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-10-06 06:39 GMT

தற்கொலை மிரட்டல்

சென்னை கோயம்பேடு, லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜான்பால் (வயது 27). இவர், கோயம்பேடு சுற்றுவட்டார பகுதிகளில் ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று கோயம்பேடு ஜவகர்லால் நேரு சாலை, ஜெய் நகர் பார்க் அருகே உள்ள துணை மின் நிலையத்தில் உள்ள சுமார் 100 அடி உயரம் கொண்ட இடிதாங்கி கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கோயம்பேடு தீயணைப்பு நிலைய அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் வந்து தற்கொலை மிரட்டல் விடுத்த டிரைவர் ஜான்பாலிடம் கீேழ இறங்கி வரும்படி பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆட்டோவை மீட்க கோரிக்கை

அதற்கு ஜான்பால், தனது ஆட்டோவை நண்பர் ஒருவர் எடுத்து சென்றதாகவும், அதனை மீட்டு தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். அந்த ஆட்டோவை மீட்டு தருவதாக போலீசார் கூறினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு ஜான்பால் கீழே இறங்கி வந்தார்.

பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்