சாலையில் கிடந்த கேமராவை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்

மானாமதுரை-ராமேசுவரம் நான்கு வழிச்சாலையில் கிடந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான கேமராவை போலீசில் ஆட்டோ டிரைவர் ஒப்படைத்தார்.

Update: 2023-01-31 18:45 GMT

மானாமதுரை

மானாமதுரை-ராமேசுவரம் நான்கு வழிச்சாலையில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள கேமரா கிடந்தது. இதை அந்த வழியாக சென்ற ஆட்டோ டிரைவர் விஜயகுமார் மற்றும் உடன் பயணித்த பயணி நாகராஜ் ஆகிய இருவரும் பார்த்தனர். பின்னர் அந்த கேமராவை எடுத்து வந்து மானாமதுரை போலீஸ் நிலையத்தில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் தாரிக்கிடம் ஒப்படைத்தனர். கேமராவை ஒப்படைத்த டிரைவர் விஜயகுமார் மற்றும் பயணி நாகராஜை மானாமதுரை போலீசார் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்