வாலிபரை தாக்கியவர் கைது
ரிஷிவந்தியம் அருகே வாலிபரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
ரிஷிவந்தியம்,
ரிஷிவந்தியம் மதுரா அரியந்தக்கா சாலை பகுதியை சேர்ந்தவர் அம்மாசி (வயது 46). இவரது மகன் அன்பு(24). இந்த நிலையில் அன்புவின் தங்கையிடம் அதே பகுதியை சேர்ந்த தேசிங்குராஜா (26) என்பவர் பேசிக்கொண்டிருந்தார். இதைபார்த்த அன்பு, தனது தங்கையிடம் என்ன பேசினாய் என தேசிங்குராஜாவிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் தேசிங்குராஜா அன்புவை திட்டி தாக்கியதாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேசிங்குராஜாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.