கொத்தனாரை தாக்கியவர் கைது

கொத்தனாரை தாக்கியவர் கைது

Update: 2022-06-11 22:37 GMT

நெல்லை:

நெல்லை அருகே உள்ள திருமலைகொழுந்துபுரத்தை சேர்ந்தவர் நெல்லையப்பன் மகன் பாலகிருஷ்ணன் (வயது 24). கொத்தனார். இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் நின்றுக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் (30) என்பவர், பாலகிருஷ்ணனிடம் மது வாங்கி தர கேட்டு தகராறு செய்தாராம். ஆனால் பாலகிருஷ்ணன் மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பாலமுருகன் அங்கு கிடந்த கம்பை எடுத்து பாலகிருஷ்ணனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்