பெருந்துறைப்பட்டு தூய காணிக்கை அன்னை ஆலய ஆண்டு பெருவிழா
பெருந்துறைப்பட்டு தூய காணிக்கை அன்னை ஆலய ஆண்டு பெருவிழா நடைபெற்றது.
வாணாபுரம்
பெருந்துறைப்பட்டு தூய காணிக்கை அன்னை ஆலய ஆண்டு பெருவிழா நடைபெற்றது.
வாணாபுரம் அருகே உள்ள பெருந்துறைப்பட்டு தூய காணிக்கை அன்னை ஆலயத்தில் 44-ம் ஆண்டு பெருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி காலை, மாலை நேரங்களில் சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது.
முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது. இதில் பங்குத்தந்தை வின்சென்ட் தலைமையில் அலங்கரிக்கப்பட்ட தேருக்கு புனித நீர் கொண்டு மந்திரிக்கப்பட்டது. ஜான்ஜோசப், ஸ்டீபன்ஆகியோர்களின் முன்னிலையில் புனித சூசையப்பர், தூய காணிக்கை அன்னை உள்ளிட்ட சொரூபங்கள் அடங்கிய ஆடம்பர தேர் பவனிபெருந்துறைபட்டின் முக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் கோவில் வளாகத்தை வந்தடைந்தது.
இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு வழிபாடு செய்தனர். இதனை முன்னிட்டு ஆலயத்தின் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை மற்றும் ஊர் காரியக்காரர்கள் செய்திருந்தனர்.