விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு

அருப்புக்கோட்டை அருகே விவசாயிகள் முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-05-08 19:16 GMT

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகே விவசாயிகள் முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

விவசாயிகள் புகார்

அருப்புக்கோட்டை அருகே புலியூரான் மற்றும் பன்னிகுண்டு கிராமத்தின் இடையே தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியில் கற்களை ஏற்றிச்செல்லும் லாரிகள் வந்து செல்வதற்காக அங்குள்ள கண்மாய் கரையை அகலப்படுத்தி கண்மாய் கரையின் மீது மண் சாலை போடப்பட்டுள்ளது.

இதனால் கண்மாயை ஆழப்படுத்தியும் விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்ல முடியாத சூழல் உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். கண்மாய் கரையை ஆக்கிரமித்து லாரிகள் செல்லக்கூடாது என அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

முற்றுகை போராட்டம்

இந்தநிலையில் இந்த கண்மாய் கரை வழியாக கல்குவாரி லாரிகள் செல்லக்கூடாது என வலியுறுத்தி விவசாயிகள் திடீரென கண்மாய் வழித்தடத்தை முற்றுகையிட்டு அந்த வழியாக லாரிகள் செல்ல முடியாதபடி போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சுழி போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் தங்களது கோரிக்கையை மனுவாக அதிகாரிகளிடம் கொடுத்தனர் மனுவை பெற்றுக்கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்