ஆறுகளில் மண்டி கிடக்கும் ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும்

ஆறுகளில் மண்டி கிடக்கும் ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும்

Update: 2022-05-28 16:28 GMT

வாய்மேடு:

வாய்மேடு பகுதிகளில் உள்ள ஆறுகளில் மண்டி கிடக்கும் ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆகாய தாமரைகள்

நாகை மாவட்டம் தாணிக்கோட்டகம், வாய்மேடு, மருதூர், ஆயக்காரன்புலம், பன்னாள், கருப்பம்புலம் வரை பாசன மற்றும் வடிகால் ஆறுகள் உள்ளன. இதில் தாணிக்கோட்டகத்திலிருந்து வாய்மேடு வரை முள்ளியாறும், தகட்டூரிலிருந்து ஆதனூர் வரை மானங்கொண்டானாறும் ஓடுகிறது. இந்த ஆறுகளில் அதிக அளவில் ஆகாய தாமரைகள் மண்டி கிடக்கிறது. மேலும் மருதூர் கடைத்தெருவில் இருந்து தகட்டூர் ஆதியங்காடு வரை உள்ள செல்லக்கோன் வாய்க்காலிலும் ஆகாயத்தாமரை மண்டி கிடக்கிறது.

அகற்ற வேண்டும்

இதனால் ஆறுகளில் கால்நடைகள் இறங்கி தண்ணீர் குடிக்க முடியாத நிலை உள்ளது. மண்டி கிடக்கும் ஆகாய தாமரைகளால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் ஆறுகளில் இடையூறாக உள்ள ஆகாய தாமரைகளால் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே மேட்டூர் அணை தண்ணீர் கடைமடை பகுதியான வேதாரண்யம் பகுதிக்கு வருவதற்குள் வாய்மேடு பகுதிகளில் உள்ள ஆறுகளில் மண்டி கிடக்கும் ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்