இறையூரில் பள்ளி கட்டிடம் மீது ஏறி ஆய்வு செய்த கூடுதல் கலெக்டர்

இறையூரில் பள்ளி கட்டிடம் மீது ஏறி கூடுதல் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-10-13 18:45 GMT

பெண்ணாடம்

பெண்ணாடம் அடுத்த இறையூர் ஊராட்சியில் மண்புழு வளர்ப்பு கொட்டகை, குப்பை தரம் பிரிக்கும் இடத்திற்கான கொட்டகை, இரண்டு குப்பை குழிகள், சமுதாய உறிஞ்சி குழி மற்றும் அங்கன்வாடி கட்டிடம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தை சீரமைக்கும் பணி உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை கடலூர் மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பவன்குமார் கிரியப்பனவர் ஆய்வு செய்தார்.

அப்போது ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதை பார்வையிட்ட கூடுதல் கலெக்டர், கட்டிடத்தின் மேல் பகுதி வழியாக மழைநீர் உட்புகாமல் இருக்க மேல்தளத்தில் ஓடு பதிக்கும் பணியை ஆய்வு செய்ய ஏணி வைத்து கட்டிடத்தின் மீது ஏறினார். பின்னர் அவர் பணியை தரமாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் (வளர்ச்சி) சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜெயக்குமாரி, துணை பொறியாளர்கள் சுகந்தி, சாந்தி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ராஜி, ஒன்றிய சுகாதார ஒருங்கிணைப்பாளர் சாரதா, ஊராட்சி மன்ற தலைவர் சுதா ரத்தினசபாபதி, ஊராட்சி செயலர் குமார், வார்டு உறுப்பினர் வெங்கடேசன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்