தலைமறைவாக இருந்த கைதி சிக்கினார்

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று தலைமறைவாகி இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-30 17:59 GMT

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று தலைமறைவாகி இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

சிவகங்கை மாவட்டம் உதயனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியம் (வயது 70). அரசு புறம்போக்கு இடத்தில் மிளகாய் காய வைப்பதில் ஏற்பட்ட தகராறில் ஆரோக்கியம் தன்னுடைய உறவினரான ஜேசு என்பவரை கொலை செய்தாராம். இந்த வழக்கில் ஆரோக்கியத்திற்கு சிவகங்கையில் உள்ள முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 2006-ம் ஆண்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஆரோக்கியம் மதுரை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். மேலும் அவர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்தார்.

இந்நிலையில் இவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ஐகோர்ட்டு கிளை உறுதி செய்தது. இதற்கிடையே ஆரோக்கியம் தலைமறைவாகிவிட்டார். இதை தொடர்ந்து அவருக்கு முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது.

கைது

தலைமறைவாக இருந்த ஆரோக்கியத்தை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையில் ஆரோக்கியம் சென்னையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்