தூத்துக்குடி மாவட்டம் 36-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அனைத்து அரசுஅலுவலகங்களிலும் வியாழக்கிழமைகோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் 36-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அனைத்து அரசுஅலுவலகங்களிலும் வியாழக்கிழமைகோலாகலமாக கொண்டாடப்பட்டது.

Update: 2022-10-20 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டம் 36-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அனைத்து அரசு அலுவலகங்களிலும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் மரக்கன்று நட்டினார்.

தொடக்க விழா

நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரிந்து, தூத்துக்குடி மாவட்டம் கடந்த 20.10.1986-ல் உருவாக்கப்பட்டது. இதன் 36-வது ஆண்டு தொடக்க விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் வாழைக்கன்றுகள், பலூன்கள் உள்ளிட்ட தோரணங்கள் கட்டப்பட்டு அழகுபடுத்தப்பட்டு இருந்தன. மாவட்டத்தில் உள்ள அனைத்து நினைவு இல்லங்கள், மணிமண்டபங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. நேற்று காலையில் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் சிறப்பு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற தூய்மை பணியில் கலெக்டர் செந்தில்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு தங்களது அலுவலகளில் தூய்மை பணி மேற்கொண்டனர். சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்களும் அனைத்து அலுவலகங்களிலும் நடந்தன. இதில் மக்கள் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வேண்டி மனுக்களை அளித்தனர். அந்த மனுக்களுக்கு அதிகாரிகள் உடனடி தீர்வு கண்டனர். மேலும், அனைத்து அரசு அலுவலக வளாகங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்களில் மரக்கன்றுகள் நடும் பணி நடந்தன.

மரக்கன்று நடும் நிகழ்ச்சி

தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டினார். நிகழ்ச்சியில் தாசில்தார் செல்வக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், தூத்துக்குடி மாவட்டத்தின் பெருமைகளை விளக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள முத்துநகர் பாடல் என்ற சிறப்பு பாடலை கலெக்டர் வெளியிட்டார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உதவி உறைவிட மருத்துவ அலுவலர் சூரிய பிரபா எழுதிய பாடலை உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி மற்றும் ஜெயா ஆகியோர் பாடி உள்ளனர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், அரசு மருத்துவமனை டீன் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நலத்திட்ட உதவி

இது குறித்து கலெக்டர் கூறும் போது, அனைத்து அலுவலகங்களிலும் சிறப்பு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அனைத்து அரசு அலுவலக வளாகங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன. அனைத்து அலுவலகங்களிலும் மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது 14 நாட்களில் தீர்வு காணப்பட்டு, தேவையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்