அம்மன் கழுத்தில் கிடந்த 12 பவுன் நகை திருட்டு

கோவிலில் அம்மன் கழுத்தில் கிடந்த 12 பவுன் நகை திருடப்பட்டது.;

Update: 2023-05-26 19:07 GMT

வடக்கன்குளம்,:

ஆவரைகுளம் முத்தாரம்மன் கோவிலில் சில நாட்களுக்கு முன்பு திருவிழா நடைபெற்றது. திருவிழா காலங்களில் 125 பவுன் நகைகள் அம்மனுக்கு அணிவித்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இதர பூஜை நாட்களில் 7 பவுன் நகை அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருக்கும். கடந்த சில நாட்களுக்கு முன்பு நேர்த்திக்கடனாக 5 பவுன் நகை அம்மனுக்கு அணிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கோவிலுக்கு வந்த மர்மநபர்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்வது போல் நடித்து பூசாரியை திசை திருப்பி, அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த 12 பவுன் நகைகளை திருடிச் சென்றனர். இதுகுறித்து பழவூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்