1,100 ஆண்டுகள் பழமைவாய்ந்த அழகுராஜ பெருமாள் கோவில் ரூ.4 கோடியில் புனரமைப்பு

தக்கோலத்தில் உள்ள 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அழகுராஜ பெருமாள் கோவில் ரூ.4 கோடியில் புனரமைப்பு பணியை அமைச்சர்கள் ஆர்.காந்தி, பி.கே.சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Update: 2023-01-23 18:34 GMT

1,100 ஆண்டு பழமைவாய்ந்த கோவில்

அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்தில் சோழர் காலத்திற்கு முன் கட்டப்பட்ட சுமார் 1,100 ஆண்டுகள் பழமையான அழகுராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பாழநைத நிலையில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான இடத்தை சுமார் 53 குடும்பங்கள் ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்து வந்தனர். இது தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ஐகோர்ட்டு தீர்ப்பில் ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி கோவிலை புனரமைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி தொடர்ந்து அங்கேயே இருந்து வந்த 53 ஆக்கிரமிப்பு குடும்பங்களுக்கு நகரி குப்பம் பகுதியில் மாற்று இடம் வழங்கப்பட்டன. இதனையடுத்து சிதிலமடைந்திருந்த கோவிலை சுனில் ரவீந்திரநாத் மற்றும் பபிதா சுனில் ஆகிய உபயதாரர்கள் மூலம் ரூ.4 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புக்காக அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்றது.

அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்

நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தனர். ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், திருமலை பெரிய கோவில் கேள்வியப்பன் சடகோப ராமானுஜ பெரிய ஜீயர், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன், போரூர் ராமச்சந்திரா மருத்துவ மருத்துவமனை தலைவர் வெங்கடாசலம், வினோத் காந்தி, தக்கோலம் பேரூராட்சி தலைவர் நாகராஜ், நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேல், அரக்கோணம் தாசில்தார் சண்முக சுந்தரம், தக்கோலம் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் வருவாய்த்துறை அலுவலர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்